Monday, March 22, 2010

தீவிரவாதம் ஒழிக்க படுமா???





எல்லோருக்கும் வணக்கம்.

இன்னிக்கு நான் நியூஸ் பேப்பர்-ர பாத்தன்ன ஒரு நல்ல நியூஸ் படுச்ச அது என் ராசிபலன்-ல காசு கிடைக்கும்கிர நியூஸ் இல்ல. வெடிகுண்டு வழக்குல பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்-கு தூக்கு தண்டனை உறுதி செய்யப் பட்டதுன்கர நியூஸ் தான் அது. ரொம்ப சநதோசமா இருந்தாலும் ரொம்ப லேட்டா தீர்ப்பு வழங்கிருகாங்க. தீர்ப்பு வந்துட்டாலும் தண்டணைய நிறைவேத்த இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் ஆகும் என்ற நியூஸ் படுச்சு வயுறு தான் எரிஞ்சுது. அதுவும் இல்லாம வழக்க மறுபடியும் சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பன்னிருக்கானாம் அஜ்மல். என்ன பண்ண நம்ம நாட்டு சட்டதிட்டங்கள் அப்படி இருக்கு. அத மாத்திட்டா கண்டிப்பா 2020௦ல இல்ல அதுக்கு முன்னாடியே நம்ம நாடு வல்லரசு ஆகிரும்..... இப்படி சொன்னா மட்டும் போதுமா அதுக்கு என்னன்ன பண்ணலாம்னு நா நினைக்கரத சொல்லிருக்க நீய்ங்க நினைக்கரதையும் இங்க கமெண்ட்டா குடுங்களேன் பிரிண்ட்ஸ் ஓகே வா...

என்ன பொறுத்த வரைக்கும் மட்டும் இல்ல எல்லாரையும் பொறுத்த வரைக்குமே குற்றங்கள் ஏன் அதிகமா ஆகுதுன்னா தண்டனைகள் கடுமையா இல்லாததும் ஒரு காரணம். நம்ம நாட்ட பொறுத்த வரைக்கும் ஹை கோர்ட்ல மரண தண்டனைகள் வழங்க பட்டாலும் அத நிறைவேத்தரதுக்குள்ள ஒன்னு சுப்ரீம் கோர்ட்-ல அப்பீல் பண்ணி தண்டணைய கொரச்சுருவாங்க இல்லன்னா மனித நேயம் அப்படி இப்படின்னு தண்டனையே இல்லாம பண்ணிருவாங்க. அப்படியும் இல்லன்னா தண்டணை வாங்கறதுக்கு ரொம்ப வருஷம் காத்து காத்து அவனே செத்து போயிருவான். இதுதான் நடக்கும். இதுக்கு என்ன பன்ணனும்னா ஒருத்தன் மேல குற்றம் நிரூபிக்க பட்டதுல இருந்து அதிகபட்சம் ஒரு மாசதுக்குல்லையே தீர்ப்பு சொல்லி அவனுக்கு தண்டணைய குடுத்தரனும். அப்படி பன்னினா தான் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காமலும் இருப்பாங்க, சரியான தண்டனையும் அவங்களுக்கு கிடைக்கும். இதுக்கு முதலில் சட்டத்த மாத்தனும். இதமாரி தீவிரவதிகளுக்கும், வன்முறை பண்றவங்களுக்கும், மனசாட்சி இல்லாம மனிதர்களுக்கு தொல்ல உண்டாக்குற எல்லா மனிதமிருகங்களுக்கு தண்டணைகள மட்டுமே குடுக்கற தனி நீதிமன்றங்கள் வரணும். இதமாறி தப்பு பண்றவங்களுக்கு நாம இறக்கம் காட்டாமல் தண்டனைகள் குடுத்தா தான் அடுத்த முறை அந்த தப்ப பண்றவன் பயப்படுவான்.
சீனா-ல ஆண்டுக்கு குறைந்தபட்சம் பத்தாயுரம் மரண தண்டனைகள் நிறைவேத்தரான்கலாம் அதுவும் அவங்களுக்கெல்லாம் தனித்தனியா தண்டனைகள் குடுக்க முடியறதில்லன்னு ஒரு வேன் கண்டுபுடிச்சுருக்கான்கலாம், அதுல மரண தண்டனை கைதிகள உக்கார வெச்சு ஒரே டைம்-ல எல்லாரையும் கொல்லரான்கலாம் இது எப்படி இருக்கு... இப்படி நம்ம நாட்டுலயும் சட்டங்கள கொண்டு வந்தா மரண தண்டனைக்காக காத்துட்டு இருக்கணும்னு அவசியமே இல்ல இல்லையா???

Thursday, March 18, 2010

என் முதல் வணக்கம்.

அனைவருக்கும் என் வணக்கங்கள்
இதுவே என் முதல் அறிமுகம், இந்த வலைப்பதிவை பற்றி கேள்விப்பட்ட பின் என் மனதில் தோன்றுகின்ற அணைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள எனக்கு கிடைத்த வரப்ரசதமாகவே நான் நினைக்கிறேன். ஏனெனில் நான் நேரிடையாக பேச முடியாத சில விஷயங்களை பற்றி முகம் தெரியாத உங்கள் எல்லோரிடத்திலும் பேச எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை இந்த வலைபதிவு ஏற்ப்படுத்தி கொடுக்கும் வகையுள் உள்ளது. எனவே இந்த வலைபதிவிற்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு இனி நான் பகிர்ந்து கொள்ளும் அணைத்து பதிவுகளுக்கும் உங்களின் ஆதரவை எனக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.